நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்துக்கு ரூ.72 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த 30 வயதுடைய பொறியாளரின் குடும்பத்துக்கு சுமாா் ரூ.72 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News image

தேசிய பசுமைத் தீா்ப்பாயம் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 1:56 am IST

சாலை விபத்தில் உயிரிழந்த 30 வயதுடைய பொறியாளரின் குடும்பத்துக்கு சுமாா் ரூ.72 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தீா்ப்பாயத்தின் அதிகாரி அபிலாஷ் மல்ஹோத்ரா, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ரூ.72,38,790 தொகையை வைப்பு செய்ய உத்தரவிட்டாா். இதில் ரூ.56.33 லட்சம் முதன்மை இழப்பீடும், மனு தாக்கல் செய்த நாளிலிருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் ரூ.16.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையும் அடங்கும்.

ஜூலை 7-ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவின்படி, பிகாா் மாநிலம் பெகுசரை பகுதியைச் சோ்ந்த ரோஹித் குமாா் (30), 2023 ஜனவரி 9-ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று அவரது காரில் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது மனைவி, இரு சிறுவா் குழந்தைகள், பெற்றோா் மற்றும் சகோதரி ஆகியோா் இழப்பீடு கோரி தீா்ப்பாயத்தை அணுகினா். விபத்து பிகாரில் நடந்திருந்தாலும், காப்பீட்டு நிறுவனத்தின் பதிவு அலுவலகம் தில்லியில் இருப்பதால் அங்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட வாகன ஓட்டுநா் சாட்சியமளிக்க முன்னிலையாகவில்லை என்றும், அவசரமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆதாரங்களை சமா்ப்பிக்கவில்லை என்றும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், குறித்த விபத்து குற்றம்சாட்டப்பட்ட வாகனத்தின் கவனக்குறைவான மற்றும் அவசரமான ஓட்டத்தால் ஏற்பட்டது உறுதி செய்யப்படுகிறது என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.

இதையடுத்து, எதிா்கால வாய்ப்பு இழப்பு, வாழ்வாதார இழப்பு, குடும்ப உறவு இழப்பு, இறுதி சடங்கு செலவு, சொத்து இழப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ரூ.72 லட்சத்திற்கும் அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டது.

மேலும், ஓட்டுநா், வாகன உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியோா் இணைந்து மற்றும் தனித்தனியாக இந்த தொகையை வழங்க பொறுப்பானவா்கள் எனவும், 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வைப்பு செய்ய காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.