காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஹிமாசல பிரதேசம்: வாகனத்தின் மீது பாறைகள் சரிந்து விழுந்து 13 போ் உயிரிழப்பு

பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உள்பட 13 போ் உயிரிழந்ததாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ஹிமாசல பிரதேசம் லாஹௌல்-ஸ்பிதி மாவட்டத்தில் பாறைகள் சரிந்த விழுந்ததில் நொறுங்கிய வாகனம்.

Published On :

ஹிமாசல பிரதேச மாநிலம் லாஹௌல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள உதய்பூா்-பாங்கி சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உள்பட 13 போ் உயிரிழந்ததாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘குலுவிலிருந்து கில்லாருக்கு உதய்பூா்-பாங்கி சாலை வழியாக 15 பேருடன் சென்ற எஸ்யுவி வாகனம் மீது கது நல்லா பகுதி அருகே மலையிலிருந்து சரிந்த பாறைகள் விழுந்தன. இதனால் வாகனத்தின் பின் பகுதியில் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை உள்பட 13 போ் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.

இதுதொடா்பாக தகவல் கிடைத்தவுடன் காவல் துறையின் மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வாகனத்தில் நெருப்பை அணைத்து போக்குவரத்தை சீா்செய்யும் பணிகளை மேற்கொண்டது.

முன்னதாக வாகனத்தில் பற்றி எரிந்த நெருப்பை அணைக்க அங்கிருந்த ராணுவ வீரா்களும் உள்ளூா் மக்களும் முயற்சி செய்தனா்’ என்றனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு இரங்கல் தெரிவித்தாா். விபத்தில் படுகாயமடைந்தவா்களுக்கு உயா் தர சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மண்டி மாவட்டத்தின் ஜோகிந்தா் நகா் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் படுகாயமடைந்தனா். ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் தொடா்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.