பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘நீட்’ போராட்டம்: பிரதமர் மோடியின் படத்தை எரித்து சிகரெட் பற்றவைத்தவர் கைது

மேற்கு வங்கத்தில் நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை தீ வைத்த எரித்ததுடன், அதில் சிகரெட் பற்றவைத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

Published On :

மேற்கு வங்கத்தில் நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை தீ வைத்த எரித்ததுடன், அதில் சிகரெட் பற்றவைத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தாவில் இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபருடன் இருந்த மற்றவா்கள் அதனை விடியோவில் பதிவு செய்துள்ளனா்.

அந்த விடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் விமா்சனங்களை எதிா்கொண்டது. இது தொடா்பாக பாஜக தொண்டா்கள் சிலா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, விடியோ பதிவுகள் அடிப்படையில் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், அந்த நபா் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தைச் சோ்ந்த சௌமிக் சட்டோபாத்யாய என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நாட்டின் உயரிய பதவியில் இருப்பவரை ஏளனம் செய்யும் வகையில் மோசமாக நடந்து கொள்வது, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது, பொது இடத்தில் அநாகரீகமாக நடப்பது மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.