காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கும் ஷர்மிளா தன்கர், வீட்டில் நடக்கும் வன்கொடுமைக்கு ஆளாகி, முதல் கணவரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு, விளையாட்டு பயிற்சியின் முதன்முறையாக தன்னுடைய 34 வயதில் தொடங்கியிருக்கிறார்.
ஊடகங்களில் சமூக, பெண்ணிய வாதங்களை யதார்த்தமாக வெளியிட்டு வரும் ஓப்ரா வின்ஃப்ரே, ஒரு நேர்காணலில் தான் தன்னடைய 44வது வயதை மீண்டும் வாழ வேண்டும் என்று சொல்லியிருப்பார், அப்போதுதான் யாருக்காகவும் வாழாமல், தன்னுடைய நலனைக் கருத்தில் கொண்டு தான் வாழத் தொடங்கியதாக. அதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார் ஷர்மிளா தன்கர்.
23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை இந்தியா 1 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றது.
பாரா தடகளப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள்) பெண்களுக்கான எஃப்57 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 40 வயதான மாற்றுத்திறனாளி வீரர் ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனில் அவரது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இன்று தங்கம் பதக்கம் வென்று, இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் ஷர்மிளா தன்கர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய 2 வயதில் போலியோவால் வலது கால் பாதிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய தாய் பார்வை மாற்றுத்திறநாளி. தந்தை விவசாயி. குடும்பம் வறுமையில் வாடியது. 19 வயதில் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள். ஒரு நாள் இரவு முழுவதும் கணவர் அடித்துத் துன்புறுத்தி குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்தினார். அதன்பிறகு நான் அங்கு திரும்பிச் செல்லவேயில்லை என்கிறார் ஷர்மிளா.
அஜித் ஜிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேனி. அவர்தான் பாரா விளையாட்டு பற்றி எனக்கு அறிமுகம் செய்தார். 34 வயதில்தான் முதல் முறையாக விளையாட்டில் பயிற்சி தொடங்கினேன். பயிற்சி பெற ஊக்கமளித்தார். பயிற்சியாளர்களிடம் சேர்த்துவிட்டார்.
2021ஆம் ஆண்டில் தேசிய பாரா சாம்பியன் போடியில் பங்கேற்று தங்கம் வென்றேன்.
2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டேன். ஆசிய பாரா விளையாட்டிலும் 4வது இடம். ஒரு பக்கம் கடும் உழைப்பு, மறுபக்கம் வறுமை. 2023ல், எனது வீட்டை விற்றுவிட்டு பயிற்சி எடுத்தேன். வாடகை வீட்டில் இருந்தோம். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். எனக்கு இரண்டாவது பிறப்பு கொடுத்தது இந்த விளையாட்டுதான். நான் மீண்டும் வீடு வாங்குவேன் என்றார்.
தாயைப் பின்பற்றி, ஷர்மிளாவின் இரண்டு மகள்களுமே விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். 15 வயதாகும் அஞ்சு ஈட்டி எறிதலிலும், 13 வயதாகும் லட்சுமி நீளம் தாண்டுதலிலும் வளர்ந்து வரும் வீராங்கனைகளாக உள்ளனர்.
ஒருநாள் குடும்ப வன்முறைக்கு இலக்கான தான், இன்று தங்கத்தை இலக்காக வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறன் என்று மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக மாறி நிற்கிறார் தங்கமான ஷர்மிளா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!

போலியோ பாதிப்பு, விடாமுயற்சி... கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



