FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு! ராகுல் கோரிக்கை

மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்க ராகுல் காந்தி கோரிக்கை...

News image

பெல்லட் குண்டுகளால் காயமடைந்த மாணவருடன் ராகுல் காந்தி - ANI

Updated On :30 ஜூலை 2026, 12:59 pm IST

தில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே, போராட்டத்தில் காவல்துறையினர் எனக் கூறிக் கொண்டு, சீருடை அணியாமலும், பெயர் பட்டை இல்லாமலும் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும், பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களை நோக்கி ஏகே - 47 துப்பாக்கியால் காவல்துறை சுட்டதில் சிலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், மாணவர்கள் நீதி பெறத் தகுதியானவர்கள் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில்தான் நடந்தது எனக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Summary

An independent SC monitored high powered committee must be constituted to probe brutalities against our students - rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.