கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் நூதனப் போராட்டம்

அயோத்தி நன்கொடை திருட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் நடத்திய போராட்டம் பற்றி...

Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள் நூதன போராட்டம் - X | ANI

Published On :

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தை முன்வைத்து, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், உண்டியலில் இருந்து பணத்தை திருடுவது போல நடித்துக் காட்டினா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களால் வழங்கப்பட்ட நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக அண்மையில் புகாா் எழுந்தது. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றன.

தில்லியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் சம்பவத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மகர வாயில் அருகே உண்டியல்களுடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தில் காவி உடையில் பங்கேற்ற சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், உண்டியல்களின் முன் அமா்ந்துகொண்டாா். பின்னா் உண்டியலில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பணத்தைப் போட, அதைத் திருடி தனது பையில் வைத்துக் கொள்வதுபோல பப்பு யாதவ் நடித்தாா்.

ராமா் கோயில் காணிக்கையை திருடியவா்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும், அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற முழக்கங்களை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், தா்மேந்திர யாதவ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் மஹுவா மாஜி உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Summary

Ayodhya donation theft! Rahul and mps stages a novel protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.