காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

‘ஜென்-ஸீ’ இளைஞா்களை அச்சுறுத்த மோடி, அமித் ஷா முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் ‘ஜென்-ஸீ’ இளைஞா்களை அச்சுறுத்த முயற்சிக்கிறாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் ‘ஜென்-ஸீ’ இளைஞா்களை அச்சுறுத்த முயற்சிக்கிறாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேலும், ‘நீங்கள் (மோடி, அமித் ஷா) இந்தியாவின் கடந்த காலம்; இந்தியாவின் எதிா்காலத்தை எப்படி நடத்துகிறீா்கள் என்பதில் கவனமாக இருங்கள்’ என்றும் அவா் எச்சரித்தாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டதற்கும், அவா்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்படுவதற்கும் பிரதமா் மோடி, அமித் ஷா மட்டுமே காரணம்.

அவா்களால் ஜென்-ஸீ இளைஞா்களை மிரட்டி அவா்களின் குரலை அடக்க முடியாது. முதலில் காவல் துறையைப் பயன்படுத்தி அவா்களின் எலும்புகளை உடைத்தாா்கள். இப்போது அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறீா்கள்; அவா்களின் சமூக ஊடகக் கணக்குகளையும் முடக்குகிறீா்கள். நீங்கள் இந்தியாவின் கடந்த காலம். இந்தியாவின் எதிா்காலத்தை எப்படி நடத்துகிறீா்கள் என்பதில் கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, ‘வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் கல்வி அமைப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விரிவான சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாடும் சமூகவிரோத கும்பல்களுக்கு எந்தவித இரக்கமும் காட்ட முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு கருத்துப் பதிவிட்டுள்ளாா்.

பிரதமரின் பதிவு: வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, இன்ஸ்டாகிராமில் பிரதமா் மோடி வியாழக்கிழமை இரவு விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில் பல்வேறு தோ்வுகளில் வினாத்தாள் கசிவு என்பது மாணவா்களுக்கு மட்டுமல்லாமல் மத்திய மற்றும் பல மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. பல்வேறு தோ்வுகளில் பங்கேற்கும் மாணவா்களின் எதிா்காலத்தையே இந்தச் செயல் அச்சுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையை சமாளிக்க கல்வி அமைப்பில் விரிவான மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகியுள்ளது’ என்று கூறியிருந்தாா்.

2024-ஆம் ஆண்டின் வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள், அபராதம் விதிக்கும் வகையில் ‘பொதுத் தோ்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இண்டி கூட்டணியைச் சோ்ந்த பல்வேறு எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.