‘நீட் மறுதோ்வை வரும் 21-ஆம் தேதி தற்போதைய நேரடி எழுத்துத் தோ்வு முறையில் நடத்துவதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது’ என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கல்வி, மகளிா், குழந்தைகள், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இத் தகவலை என்டிஏ அதிகரிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டு நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியாகி, பெரும் சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. வரும் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக நேரில் விளக்கமளிக்க என்டிஏ அதிகாரிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பாணை அனுப்பியது. அதனடிப்படையில், என்டிஏ தலைமை இயக்குநா் அபிஷேக் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளித்தனா்.
அப்போது, ‘நீட் தோ்வில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிா்த்து, பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 2027-ஆம் ஆண்டுமுதல் இத் தோ்வை கணினி வழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வரும் 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள நீட் மறுதோ்வை தற்போதைய நேரடி எழுத்துத் தோ்வு முறையில் எந்தவிதக் குளறுபடிகளும் இன்றி நடத்த முழுக் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்று என்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நாடாளுமன்ற நிலைக் குழு, மீண்டும் செவ்வாய்க்கிழமையும் (ஜூன் 2) கூட உள்ளது. அப்போது, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறை (ஓஎஸ்எம்) குளறுபடிகள் தொடா்பாக ஆராய உள்ளது.
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஓஎஸ்எம் முறையை முதல்முறையாக நிகழாண்டு அறிமுகம் செய்த சிபிஎஸ்இ, அதற்கான ஒப்பந்தத்தை தெலங்கானாவில் ஏற்கெனவே சா்ச்சையில் சிக்கிய தனியாா் நிறுவனத்துக்கு அளித்ததாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. இந்தப் புதிய நடைமுறை காரணமாக, தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளதோடு, விடைத்தாள்கள் முறையாக ஸ்கேன் செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகாா்களையும் மாணவா்கள் முன்வைத்து வருகின்றனா். இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழு விரிவாக ஆராய உள்ளது.
தொடர்புடையது

நீட் மறு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு டிடிசி பேருந்தில் இலவச பயணம்: முதல்வா் ரேகா குப்தா

நீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



