மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நீட் விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து...

Neet

நீட் விவகாரத்தில் கைதானவருக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு - படம் - ஐஏஎன்எஸ்

Published On :

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பி.வி. குல்கர்னி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டன.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர், பேராசிரியர் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது.

இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான பி.வி. குல்கர்னிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டடம் இருந்தது.

இந்த கட்டடத்தின் சில பகுதிகள், மாநகராட்சி அனுமதியின்றி விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கக் கோரி பி.வி. குல்கர்னிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆகையால், நகராட்சி சார்பில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் தாமாக முன்வந்து அந்தப் பகுதிகளை இடித்து அகற்றினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேதியியல் பாடப்பிரிவில் துறைசார் நிபுணரான பி.வி. குல்கர்னி, பல ஆண்டுகளாக நீட் வினாத்தாளைத் தயாரித்த குழுவில் அங்கம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The unauthorized portions of a building belonging to P.V. Kulkarni who has been accused of involvement in the NEET question paper leak were demolished on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.