ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்: ஸ்ரீதர் வேம்பு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் பதிவு..

Zoho Company CEO Sridhar Vembu interacts with media - Express Photo.

ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - ENS

Published On :

பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்க முடியாது என்று ராமச்சந்திர குஹா கூறியதற்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை வெறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்களை, கண்டித்திருக்கும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தின் அளவை விமர்சகர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த அரசியல் விவாதத்தின்போது, ​மோடியையும் அமித் ஷாவின் பாஜகவையும் என்னை விட வேறு யாரும் அதிகமாக வெறுப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வரலாற்றாளர் ராமச்சந்திரன் குஹாவின் கருத்துக்களை வேம்பு வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

மேலும், தாப்பரும் குஹாவும் பங்கேற்ற விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆவதற்கான தகுதி குறித்து பேசப்பட்டது.

அந்தக் காணொலியைப் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு, சில வட்டாரங்களில் அறிவுஜீவி என்று அழைக்கப்படுவதற்கு மோடி வெறுப்பு கிட்டத்தட்ட ஒரு அடிப்படைத் தேவையாகிவிட்டது என்றும், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்ப்பதன் மூலம் இதுபோன்ற வாதங்களை பிரதமரின் ஆதரவாளர்கள் முறியடிக்க முடியும் என்று பதிவிட்டிருந்தார்.

2014-ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாட்டின் பல பகுதிகள் கடுமையான சவால்களைச் சந்தித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தன. நக்சல் கிளர்ச்சி கடுமையாக இருந்தது. பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைப் பாராட்டிய வேம்பு, அவற்றில் எதுவும் ஏதோ ஒரு மாயாஜால வித்தையால் சாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.