தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மாநிலங்களவைத் தேர்தல்! ராகுல், டி.கே. சிவகுமார் முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல்...

Mallikarjun Kharge files Rajya Sabha nomination

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ராகுல் காந்தி, சித்தராமையா முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்... - எக்ஸ்/ கர்நாடக காங்கிரஸ்

Updated On :

கர்நாடகத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், மாநிலங்கள் வாரியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) இரவு வெளியானது.

இதையடுத்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் நிகழாண்டில் (2026) முடிவடைந்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் களமிறக்கப்படுகிறார்.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய, கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 5) கர்நாடகத் தலைநகர் பெங்களூருவுக்குச் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் முன்னிலையில் மல்லிகார்ஜுன கார்கே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் முதல்முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress party leader Mallikarjun Kharge has filed his nomination papers to contest the Rajya Sabha election in Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.