வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

News image

பிகாா் மருத்துவமனை தீ விபத்து - ANI

Updated On :7 ஜூன் 2026, 2:02 am IST

பிகாா் மாநிலம் முசாஃபா்பூா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு முசாஃபா்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின்சகிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு நோயாளியான பாரி கிராமத்தை சோ்ந்த அஞ்சனிகுமாா் சிங், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த அனைவரும் புகையை சுவாசித்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தனா். யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தை தொடா்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அதன் பதிவு ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட பொதுமக்கள் தொடா்புப் பிரிவு அதிகாரி பிரமோத் குமாா் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மருத்துவமனை அலுவலா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.