/

குதிரை பேரம் தடுக்க மசோதா கொண்டுவரப்படும்: சுப்ரியா சுலே

தேர்தல்களில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படுவது பற்றி..

News image

சுப்ரியா சுலே - file photo

Updated On :6 ஜூன் 2026, 3:46 pm IST

தேர்தல்களில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரயா சுலே தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மகாராஷ்டிர சட்ட மேலவைக்கான தேர்தலில் சலுகைகள் மற்றும் அழுத்தங்கள் குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தல்களில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் செயல்முறையில் கட்டமைப்பு மாற்றங்களைக் கோரும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்வேன். தேர்தல்களின்போது நடைபெறும் 'குதிரை பேரம்' தொடர்பான புகார்கள் நிறுத்தப்பட வேண்டும்.

கிராம ஊராட்சித் தலைவர் முதல்வர் மக்களவை தேர்தல் வரை அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 16 சட்ட மேலவை இடங்களுக்கு ஜூன் 18 தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் சிலரைத் திரும்பப் பெற்றதை அவர் நியாயப்படுத்தினார்.

குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக எழுந்த பரவலான தகவல்களுக்கு இடையே அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும், மீண்டும் தேர்தல்களில் நடைபெறும் குளறுபடியைக் களைய ஒரு குடிமகளாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் குதிரை பேரம் தடுக்க மசோதா கொண்டுவருவேன். முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் தேர்தல் செயல்முறையில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Supriya Sule, MP from the Nationalist Congress Party (Sharad Pawar faction), stated that she would introduce a bill in Parliament emphasizing transparency in elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.