பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

யார் இந்த ரேவதி சுலே? திருமணத்தில் ஷாருக்கான், அமிதாப் பங்கேற்பு! வைரல்

ரேவதி சுலே திருமணத்தில், ஷாருக்கான், அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்படம், விடியோக்கள் வைரல்.

News image

ரேவதி சுலே திருமணம்

Updated On :22 ஜூன் 2026, 12:51 pm IST

மும்பையில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற ரேவதி சுலேவின் திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சான், அவரது மனைவி ஜெயா பச்சான், மகள் ஸ்வேதா பச்சான் மற்றும் நடிகர் ரன்வீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பிரபலத்துக்கு திருமணம் என்றாலே, அது சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஒரு திருமணத்தில் இத்தனை பெரிய நடிகர்கள் பங்கேற்றிருந்தால் நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் இதுதான் பேச்சு.

அது மட்டுமல்ல, திருமண நிகழ்வில் இவர்கள் பங்கேற்றதோடு, விருந்தினர்களுடன் இணைந்து நடனமாடிய விடியோக்களும் வைரலாகியிருக்கிறது.

இந்த திருமணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், தயாரிப்பாளர் போனி கபூர், அம்பானி குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

யார் இந்த ரேவதி சுலே?

ரேவதி சுலேவின் திருமணத்தில்தான் இத்தனை கோலாகலமும். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரியா சுலே - தொழிலதிபர் சதானந்த் சுலேவின் மகள், மூத்த அரசியல்வாதி ஷரத் பவாரின் பேத்தி.

ரேவதி சுலே, மும்பையில் உள்ள செயின் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலைப் படிப்பும், லண்டனில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

Summary

Who is Revathi Sule? Shah Rukh Khan and Amitabh attend the wedding! Goes viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.