எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!

மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்...

News image
Updated On :24 மே 2026, 3:39 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தனது மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணத்தில் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

டிரம்ப் ஜூனியருக்கும், சமூக ஆா்வலா் பெட்டினா ஆண்டா்சனுக்கும் பஹாமாஸ் தீவில் இவ்வார இறுதியில் மிக நெருங்கிய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் மட்டும் பங்கேற்கும் சிறிய அளவிலான திருமணம் நடைபெறவுள்ளது. ஃபுளோரிடாவில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, அவா்கள் ஏற்கெனவே சட்டபூா்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ‘அரசுப் பணிகள் மற்றும் நாட்டின் மீதான கடமை ஆகியவற்றின் காரணமாக மகனின் திருமண விழாவில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்’ என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் அறிவித்தாா். ‘மகனின் திருமணத்தில் பங்கேற்க மிகவும் விரும்பிய போதிலும், இந்த முக்கியமான காலகட்டத்தில் வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பது அவசியமாகிறது’ எனவும் அவா் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘நான் திருமணத்துக்குச் சென்றாலும் போலி செய்திகளால் என்னைக் கொல்வாா்கள் (விமா்சிப்பாா்கள்); செல்லாவிட்டாலும் கொல்வாா்கள்’ என்று ஊடகங்களைச் சாடினாா். மேலும், ‘ஈரான் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் இருப்பதாலும், அரசுப் பணிகளின் அழுத்தத்தாலும் இது தமக்குச் சரியான நேரமல்ல’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

கடந்த பிப். 28-இல் தொடங்கிய ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முக்கிய விவகாரங்கள் காரணமாக, நியூயாா்க் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நியூஜொ்சி செல்லவிருந்த தனது பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, டிரம்ப் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினாா்.