16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கோவாவில் இறந்து கிடந்த சிறுத்தைக்குட்டி: விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

கோவாவில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Leopard cub found dead in Goa; minister orders probe

கோப்புப்படம்.

Published On :

கோவாவில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநிலம், பல்யே கிராமத்தில் உள்ள பகத்வாடா பகுதியில் சனிக்கிழமை இரவு சிறுத்தைக்குட்டி இறந்து கிடப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டறிந்தனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த வனத் துறையினர் சிறுத்தைக்குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கமல் தத்தாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, மே 2ஆம் தேதி கோவாவின் குஷாவதி மாவட்டத்தில் உள்ள பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே புலியின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Summary

A leopard cub has been found dead in North Goa district, prompting the state government to order an inquiry into the matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.