புதுதில்லி: நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதீத வெப்பத்தால் பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் அடிப்படையில், தில்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 1.6 டிகிரி அதிகம். இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது சராசரியை விட 0.1 டிகிரி அதிகம்.
நாளை (திங்கள்கிழமை) வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 42 மற்றும் 28 டிகிரி செல்சியஸை எட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில், மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 144 ஆக பதிவாகி, காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.
Summary
The weather department has predicted maximum and minimum temperatures expected to reach around 42 and 28 degrees Celsius, respectively.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவு!
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம்!
தலைநகரை வதைக்கும் கடும் வெப்பம்! தென்மேற்கு பருவமழை தாமதத்தால் 2 ஆண்டுகளில் இல்லாத மிக வெப்பம் பதிவு!

தில்லியில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்: ’உணா் வெப்பநிலை’ 48.4 டிகிரியாகப் பதிவு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



