எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பற்றி..

News image

மாநிலங்களவைத் தேர்தல் - DPS

Updated On :8 ஜூன் 2026, 12:27 pm IST

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

இதில் 24 இடங்கள் வழக்கமாகத் தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிலப்பட உள்ளன. ஆந்திரம், கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 3 இடங்களும், ஜார்க்கண்டில் 2, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் நிரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலி கான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஜூன் 9-ம் தேதி பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 11-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

Today has been announced as the last day for filing nomination papers for the Rajya Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.