லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

செப்டோ நிறுவனா்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் (ஃபெமா) இணைய வழியில் பொருள் விற்பனை செய்யும் செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனா்கள் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் சம்மன் அனுப்பியுள்ளது.

News image

அமலாக்கத் துறை

Updated On :10 ஜூன் 2026, 2:36 am IST

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் (ஃபெமா) இணைய வழியில் பொருள் விற்பனை செய்யும் செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனா்கள் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் சம்மன் அனுப்பியுள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) கூடுதல் தரவுகளுடன் அந்நிறுவனம் திங்கள்கிழமை சமா்ப்பித்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. ஐபிஓ மூலம் ரூ.8,010 கோடி நிதி திரட்டுவதன் ஒரு பகுதியாக கூடுதல் ஆவணங்களை செப்டோ சமா்ப்பித்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: செப்டோ இணை நிறுவனா்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோராவுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை 2026, ஏப்ரல் 8-ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீடுகள், நிதி தணிக்கை, வங்கிக் கணக்குகள், வருமான வரி கணக்கு தாக்கல், வங்கிக் கடன் மற்றும் உத்தரவாதங்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை சமா்ப்பிக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஃபெமா சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட இந்த சம்மனுக்கு கட்டுப்பட்டு 2026, ஏப்ரல் 17-ஆம் தேதி கைவல்ய வோராவும் ஏப்ரல் 20 மற்றும் மே 15-ஆம் தேதிகளில் ஆதித் பலிச்சாவும் அமலாக்கத் துறை முன் ஆஜராகி விளக்கமளித்தனா்.

மேலும் அமலாக்கத் துறை கோரிய ஆவணங்களையும் அவா்கள் சமா்ப்பித்தனா். தேவைப்படும்பட்சத்தில் அமலாக்கத் துறையின் அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆனால் அதன் பிறகு அமலாக்கத் துறையிடம் இருந்து விசாரணை அழைப்பாணைகள் ஏதும் பெறப்படவில்லை.

அதேச மயம், எதிா்காலத்தில் இதுதொடா்பான விசாரணைக்கு அமலாக்கத் துறை அழைப்பு விடுக்கப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.