நாட்டின் பெருமையையும் இறையாண்மையையும் அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிக நாள் பிரதமர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய அரவிந்த் கேஜரிவால், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். ஆனால், அவர் எதற்காக நன்றி கூறுகிறார்? இந்தியர்கள் இருந்த கப்பல்களைத் தாக்கியதற்காகவா? அல்லது இந்தியர்களைக் கொன்றதற்காகவா?
தற்போது நாட்டின் நிலைமை நம்பிக்கையற்ற முறையில் மாறியுள்ளது.
இந்தியாவின் பெருமையையும் இறையாண்மையையும் விட்டுவிட்டு, பிரதமர் மோடி முழுவதுமாக சரணடைந்து விட்டார்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் நீண்ட நாள்கள் தொடர்ந்து பிரதமராக தொடரும் நரேந்திர மோடிக்கு பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார்.
Summary
PM Modi has completely surrendered India's sovereignty and pride, says AAP Leader Arvind Kejriwal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







