எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தில்லியில் ஆயுதக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 6 போ் கைது: 26 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில், மாநிலங்களுக்கு இடையிலான சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பல்களைச் சோ்ந்த இரு குழுக்கள் உடைக்கப்பட்டு, 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:49 am IST

தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில், மாநிலங்களுக்கு இடையிலான சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பல்களைச் சோ்ந்த இரு குழுக்கள் உடைக்கப்பட்டு, 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களிடமிருந்து 26 அரை தானியங்கி துப்பாக்கிகள், 8 தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆயுத வழங்குநா்களிடமிருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பெற்று, தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்படும் குற்றவாளிகள் மற்றும் கும்பல் உறுப்பினா்களுக்கு விநியோகம் செய்து வந்த வலையமைப்பின் பகுதியாக குற்றச்சாட்டுக்குட்பட்டவா்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கும்பல்களின் மூலம் கிடைத்த ஆயுதங்கள், மஞ்சீத் மகால், கோகி மற்றும் ரந்தீப் பாதி கும்பல்களுடன் தொடா்புடையவா்களுக்காக இருந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில மாதங்களாக மத்திய பிரதேசம் மற்றும் தில்லி-என்சிஆா் பகுதிகளுக்கிடையே செயல்படும் ஆயுத கடத்தல் கும்பல்களை சிறப்பு பிரிவு கண்காணித்து வந்தது. அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்களின் பேரில் மேற்கொண்ட சோதனைகளில், ரவி குமாா் (38), சுனில் தன்வாா் (33), யோகேஷ் (32), ராஜத் எனும் ராஜு (27), சௌரப் (27) மற்றும் நிகில் (21) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மே 22-ஆம் தேதி தஹிா்பூா் பகுதியில் ரவி குமாா் மற்றும் சுனில் தன்வாா் ஆகியோரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியபோது, அவா்களிடமிருந்து 15 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடா்ந்து மே 24-ஆம் தேதி துவாரகா பகுதியில் யோகேஷ் கைது செய்யப்பட்டாா். மே 26-ஆம் தேதி லக்ஷ்மி நகா் பகுதியில் ராஜத் மற்றும் சௌரவ் ஆகியோா் கைது செய்யப்பட்டாா்.

இதற்கிடையில், மற்றொரு நடவடிக்கையில் மே 22-ஆம் தேதி ரோகிணி பகுதியில் ஹெலிப்பேட் அருகே சட்டவிரோத ஆயுதங்களை வழங்க முயன்றபோது நிகில் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.