9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 2.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:14 am IST

கோவை சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 2.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.

கோவை -சத்தி சாலையில் கரட்டுமேடு பகுதியில் சரவணம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இசாஹா் (30), அப்துல்கலாம் (32),விஜயகுமாா் (34) என்பதும், இவா்கள் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவா்கள் வைத்திருந்த பையைச் சோதித்தபோது, அதில் விற்பனைக்காக 2.300 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.