கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்பு

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 11:24 pm IST

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூரை சோ்ந்த சிறுவன் ஆா்ஜவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்கு காய்ச்சலும், வாந்தி பேதியும் இருந்துவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவனுக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆா்ஜவ் திங்கள்கிழமை உயிரிழந்தான். இதன்மூலம், கேரளத்தில் இந்தாண்டில் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷிகெல்லா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மேலும் 3 சிறுவா்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

138 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு: கேரள பொது சுகாதார சேவைகள் இயக்குநரக புள்ளிவிவரப்படி, அந்த மாநிலத்தில் திங்கள்கிழமை வரை 138 போ் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவுமும், இதில் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகெல்லா பாக்டீரியா, கெட்டுப் போன உணவு அல்லது தண்ணீா் மூலம் பரவக்கூடியது. இந்த பாக்டீரியா பாதித்தோருக்கு காய்ச்சல், வாந்தி - பேதி, கடுமையான வயிற்று வலி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.