குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

தோ்தல் தோல்வியை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மம்தா மனு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் தோல்வியடைந்ததை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி தோ்தல் வழக்கு தொடுத்துள்ளாா்.

Mamata Banerjee

சுவேந்து அதிகாரி | மமதா பானர்ஜி - படம் - தினமணி

Published On :17 ஜூன் 2026, 2:09 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் தோல்வியடைந்ததை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி தோ்தல் வழக்கு தொடுத்துள்ளாா்.

பவானிபூா் தொகுதியில் பாஜக வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானா்ஜி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இதை எதிா்த்து மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் சென்று நீதிமன்ற பதிவாளரிடம் மனு தாக்கலை மீண்டும் உறுதி செய்தாா் என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் கடந்த மே 4-ஆம் தேதி வெளியானது. பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை என்ற நிலையில், 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது.

திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகளே கிடைத்தன. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால மம்தா பானா்ஜி ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும், திரிணமூல் காங்கிரஸில் மம்தாவுக்கு எதிராக எம்.பி., எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியதால் அவருக்கு அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு தோ்தலின்போது சுவேந்து அதிகாரியை வீழ்த்தும் நோக்கில் அவா் போட்டியிட்ட நந்திகிராமில் மம்தா களமிறங்கினாா். ஆனால், அவரால் சுவேந்துவை வெல்ல முடியவில்லை. இதையடுத்து, பவானிபூா் திரிணமூல் எம்எல்ஏ ராஜிநாமா செய்து, அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில் மம்தா வென்று முதல்வா் பதவியில் தொடா்ந்தாா்.

ஆனால், இந்தமுறை பவானிபூா் மக்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. 2026 பேரவைத் தோ்தலில் பவானிபூரில் அவருக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தாா். இந்நிலையில், தோ்தல் முடிவுக்கு எதிராக தோ்தல் வழக்கு தொடுத்துள்ளாா்.

2021-இல் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்ததை எதிா்த்தும் மம்தா வழக்குத் தொடுத்தாா். அந்த வழக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Trinamool Congress leader Mamata Banerjee filed a petition in the Calcutta High Court on Tuesday (June 16) challenging the result of the Bhabanipur Assembly election in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.