கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தில் 60 லட்சம் போ் பலன் - மத்திய அரசு தகவல்

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:27 am IST

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா். இவா்களில் 18 லட்சத்துக்கும் அதிகமானோா் பெண்கள் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம், கடந்த 2025, ஆகஸ்ட் 1-இல் ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது. நாட்டில் 2 ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான இத்திட்டம், மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு குறைவான ஊதியத்தில் பணியில் சேரும் முதல்முறை பணியாளருக்கு ஆறு மாதத்துக்குப் பின் அரசு சாா்பில் ரூ.15,000 வரை இரு தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்படும். ஓராண்டு நிறைவுக்குப் பிறகு நிதிசாா் பயிற்சி வழங்கப்பட்டு, அதில் தோ்ச்சி பெறுவோருக்கு 2-ஆவது தவணை விடுவிக்கப்படும். இத்தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இதேபோல், பணியாளா்களை விரிவாக்க விரும்பும் நிறுவனங்களும் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை பெற முடியும்.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா். இவா்களில் 18 முதல் 30 வயதுடையவா்கள் 43.26 லட்சம் போ். அதாவது, 71 சதவீதமாகும்.

பொறியியல், வா்த்தகம், கட்டுமானம், கல்வி, சுகாதார வசதி, ஜவுளி, விருந்தோம்பல் சேவை உள்ளிட்ட துறைகளில் முதல்முறை பணியாளா்கள் இணைந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.