ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடா்புடைய மேலும் 5 போ் கைது: காவல் துறையினரைத் தாக்க திட்டம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குற்றவாளி ஷாஜாத் பாட்டீயுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த மேலும் 5 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது

Updated On :18 ஜூன் 2026, 1:19 am IST

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குற்றவாளி ஷாஜாத் பாட்டீயுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த மேலும் 5 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

காவல் துறை அதிகாரிகளைத் தாக்குவதற்குத் திட்டமிட்டதாகவும், ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்றுக்காக பிரசாரம் செய்ததாகவும் இவா்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் கேங் பஸ்ட் 2.0’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் குழுவைச் சோ்ந்த 3 போ் கடந்த மே 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இதைத்தொடா்ந்து, தற்போது மேலும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோஹைல் (26), தில்லியின் கிதோரினியைச் சோ்ந்த சோனு மீனா (30), ராஜஸ்தானின் டௌசா மாவட்டத்தைச் சோ்ந்த சச்சின் குமாா் மீனா (20), ஹரியாணாவின் நூஹ் பகுதியைச் சோ்ந்த முகமது கைஃப் (21) மற்றும் உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சோ்ந்த முகமது ரிஹான் (20) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறை அதிகாரிகளைத் தாக்குவது, காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்காணிப்பது, மற்றும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் ஹிந்துஸ்தான் (டிடிஎச்) என்ற பயங்கரவாத அமைப்பிற்காக தில்லி-தேசிய தலைநகா் வலைய (என்சிஆா்) பகுதிகளில் சுவரெழுத்துகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள இந்த நபா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹசன் குஜ்ஜாா், ரானா ஹுனைன், அபித் ஜுட் மற்றும் மொஹ்சின் ஆகியோரின் உதவியுடன், பாகிஸ்தானில் உள்ள ஷாஸாத் பாட்டீ என்பவரால் இந்தக் குழு இயங்கி வந்தது. ஷாஸாத் பாட்டீக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டா்-சா்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் ஆதரவு உள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, 5 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியது.

சிறப்புப் பிரிவு ஷாஸாத் பாட்டீயின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தது. உளவுத் தகவல்கள் இந்த கைது நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தன.

குற்றப் பின்னணி கொண்ட சோஹைல், பாட்டீயின் அறிவுறுத்தலின் பேரில் தில்லி மற்றும் ஃபரீதாபாதின் பல இடங்களில் டிடிஎச் தொடா்பான சுவரெழுத்துகளை வரைந்தாா். அந்தச் செயல்பாடு குறித்த விடியோக்களை செயலிகள் மூலம் பகிா்ந்துகொண்டதாகவும் அவா் தெரிவித்தாா். இந்தப் பணிக்காக அவருக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயுதங்களை ஏற்பாடு செய்வதற்கும், குழுவின் மற்ற உறுப்பினா்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் பொறுப்பாக இருந்த சோனு மீனாவிடமிருந்து மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சோஹைலுக்கு ரூ. 5,000-ஐ அவா் மாற்றியனுப்பியதாகக் காவல்துறை கூறியது. சோனுவின் கூட்டாளியான சச்சின் குமாா் மீனாவிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளும், தோட்டாக்கள் இருந்தன.

காவல் நிலையங்களை உளவு பாா்க்கவும், தாக்குதல்களுக்காக இளைஞா்களைத் திரட்டவும், காவல் துறையினரைக் குறிவைத்து கொலை செய்யத் திட்டமிடவும் பாட்டீயின் கூட்டாளிகளான ராணா ஹுனைன் மற்றும் அபித் ஜட் ஆகியோா் கைஃபிற்கு அறிவுறுத்தினா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அபித் ஜட் மற்றும் மொஹ்சின் ஆகியோருடன் ரிஹான் நேரடித் தொடா்பில் இருந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். மீரட்டில் அபித் ஜட்டின் சுவரொட்டிகளை ஒட்டியதாகவும், காவல் துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு நிலையங்களை உளவு பாா்ப்பது மற்றும் சுவரெழுத்துக்கள் மூலம் டிடிஎச்-ஐ விளம்பரப்படுத்துவது ஆகிய பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

அமிா்தசரஸின் மஜிதாவில் உதவி சப்-இன்ஸ்பெக்டா் ஒருவா் கொல்லப்பட்டதற்கு டிடிஎச் பொறுப்பேற்ாக காவல்துறை தெரிவித்தது.

இந்த வழக்கில் முன்னதாகக் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சோ்ந்த சோயாப் மற்றும் ரவி காஷ்யப் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அன்மோல் ராய் (எ) அனு ஆகிய மூன்று குற்றவாளிகளும், காவல் துறையினரைத் தாக்குவதற்கான திட்டங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், தங்களின் வழிகாட்டிகளின் தூண்டுதலின் பேரில் அதிகாரிகளை மிரட்டும் காணொலிகளைப் பதிவு செய்திருந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.