கடந்த 12 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புச் சூழலை எவ்வாறு மாற்றியமைத்துள்ளன என்பதை ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த 2013 இல் பலவீனமான 5 பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அதிகாரமளித்தல், நல்லாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களின் திறன் ஆகியவற்றின் உந்துதலுடன், இந்தியா மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்தில் நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கிய இடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குதல் மற்றும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலாளிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம், 'மேக் இன் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா', 'ஸ்டார்ட்அப் இந்தியா' , 'ஸ்கில் இந்தியா', 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' மற்றும் 'தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம்' போன்ற மோடி அரசின் தொலைநோக்குத் திட்டமானது, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும், தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார செழிப்பையும் ஊக்குவிக்கிறது என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.
2017-18 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு நெகிழ்ச்சித் தன்மை 1.11-ஆக இருந்ததாகவும், இது பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
2017 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் முறைசார் துறையில் 8 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதை இபிஎஃப் ஊதியப் பட்டியல் தரவுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வர்த்தகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச நெருக்கடிகளில் முதல் ஆதரவாளராக இந்தியா தனது நிலையை உலக அரங்கில் மேலும் பலப்படுத்தியுள்ளது.
இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறிச் செல்லும் நிலையில், ஊழியர்களும் வேலையளிப்பவர்களும் வளர்ச்சி, வளம் மற்றும் வாய்ப்புகளுக்கான இரட்டை இயந்திரங்களாகத் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.
Summary
That India has emerged as the fastest-growing major economy over the past 12 years under the leadership of Prime Minister Narendra Modi, driven by empowerment, good governance and inclusive development.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் வேலையின்மை அதிகரிப்பு: 11 மாதங்களில் இல்லாத அளவாக 5.5%-ஐ எட்டியது!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

ரஜெளரி காா்டனில் வேகமாக வந்த காா் மோதி பாதசாரி உயிரிழப்பு

நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




