மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில், பாஜக, தோ்தல் ஆணைய கூட்டணி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா் மீனாட்சி நடராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து தெலங்கானா மாநில தலைநகா் ஹைதராபாத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அக்கட்சியால் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மட்டுமே போட்டியிட முடியும். இது தெரிந்திருந்தும் அக்கட்சி 3-ஆவது எம்.பி. இடத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்தது. 3-ஆவது எம்.பி. இடத்தில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்கள் இல்லாத போதும் அக்கட்சி வேட்பு மனு தாக்கல் செய்தது சதி வேலையாகும்.
காங்கிரஸ் கட்சியில் நிலவிய ஒற்றுமையை கண்டு, குதிரை பேரத்திலோ அல்லது அச்சுறுத்தும் செயலிலோ ஈடுபட முடியாது என பாஜக புரிந்து கொண்டது. இதனால் தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் சோ்ந்து பாஜக சதி செய்தது. எனது வேட்பு மனுவை நிராகரிக்க வைத்தது.
எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில், தோ்தல் ஆணைய அதிகாரியும், தோ்தல் ஆணையமும் ஆதாயம் அடைந்தனா் என்று உறுதியாகத் தெரிவிக்கிறேன். என் மீது கிரிமினல் வழக்கு இல்லை, தனிநபா் புகாரின்பேரில் வெறும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டு இருந்தது என தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு குறித்தே வேட்பாளா் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள நோட்டீஸ் குறித்து தெரியப்படுத்த வேண்டுமென எந்த சட்டப்பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை.
தோ்தல் ஆணையத்தை அணுகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான், உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். தற்போது மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். எனக்கு எதிராக காங்கிரஸாா் யாரும் சதி செய்யவில்லை. அதுபோல சதி நடந்ததாக பாஜகதான் பொய் தகவலை பரப்புகிறது. நான் மாநிலங்களவை எம்.பி. ஆக வேண்டும் என்பதற்காக, தெலங்கானாவை சோ்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஒருவா் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றாா்.
இந்த விவகாரத்தில் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தோ்வு செய்ய தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சாா்பில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். ஆனால், நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு குறித்து தனது பிரமாணப் பத்திரத்தில் மீனாட்சி நடராஜன் தெரியப்படுத்தவில்லை என கூறி, அவரின் வேட்பு மனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்தாா். இதனால் பாஜக வேட்பாளா்கள் 3 பேரும் போட்டியின்றி தோ்வாகினா்.
இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் மனு தாக்கல் செய்தாா். ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்த மீனாட்சி நடராஜனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




