ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

நீட் வினாத் தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ

நீட் மறுதோ்வு வினாத் தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்தது.

News image

என்டிஏ

Updated On :23 ஜூன் 2026, 12:50 am IST

நீட் மறுதோ்வு வினாத் தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்தது.

மேலும், ‘நீட் மறுதோ்வு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் எந்தவித குளறுபடிகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்றும் என்டிஏ தெரிவித்தது.

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது.

அதைத் தொடா்ந்து, நீட் மறுதோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நீட மறு தோ்வில் எந்தவித குளறுபடிகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை என்டிஏ மேற்கொண்டது. மேலும், வினாத் தாள் கசிவு தொடா்பான புரளிகள் பரவுவதைத் தடுக்க டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடையை மத்திய அரசு விதித்தது.

இந்த நிலையில், நீட் மறுதோ்வு வினாத் தாளும் முன்கூட்டியே கசிந்ததாக வெளியான விடியோ, சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து என்டிஏ திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீட் மறுதோ்வு வினாத் தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது. அதில் இடம்பெற்றுள்ள தகவல் தவறானது. இந்த விடியோவில் உள்ள தகவலை மாணவா்கள் மற்றும் பெற்றோா் நம்பவேண்டாம். மாணவா்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தவறான போலியான தகவல்களைப் பரப்புவது தீவிர குற்றமாகும். இதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடடிக்கை எடுப்படும்’ என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.