இருண்ட வரலாற்றை நாடு மறக்கக்கூடாது என்று அவசரநிலை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) புதிய பாடத்திட்டத்தின்படி, ”சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்” (Understanding Society: India and Beyond) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் அவசரநிலை குறித்த தகவல்கள் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
என்சிஇஆா்டி சரியானதைச் செய்துள்ளது. அவசரநிலை போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. ஆகையால், வருங்கால சந்ததியினர் அவசரநிலையின் இருண்ட செயல்களை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் என்சிஇஆா்டி இந்தப் பாடத்தை அறிமுகம் செய்துள்ளது.
அவசரநிலை என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. தனிநபரின் அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக அரசியலமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த இருண்ட வரலாற்றை நாடு மறக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின்படி, குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Education Minister Dharmendra Pradhan stated on Thursday (June 25) that the country should not forget the dark history of the Emergency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
16 நாள்களைக் கடந்த சிஜேபி உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு: உண்ணாவிரதம் உள்ள சோனம் வாங்சுக் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

11வது நாளாக சிஜேபி போராட்டம்: உண்ணாவிரதத்தினால் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

மாணவர்களை பயங்கரவாதிகள் என தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கார்கே கண்டனம்!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



