நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஞ்சியில் உள்ள லோக் பவனுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்படம் பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்த முதலே பல்வேறு தரப்பினர் மத்திய அரசைக் கண்டித்தும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்கக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் போராட்டங்களைக் கையாண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் இன்று போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் இதுவரை, 89 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், 48 முறை மறு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடானது.
தங்களுடைய மகன்களை மற்றும் மகள்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறது. ஆகையால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞரணியின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
Summary
Condemning the NEET question paper leak controversy and demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, members of the Youth Congress staged a protest outside the Lok Bhavan in Ranchi on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!
நீட் மறுதேர்வை 100% தவறில்லாமல் நடத்த அரசு இலக்கு!

மத்திய கல்வி அமைச்சரைப் பதவிநீக்கம் செய்க: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




