திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

என்சிஇஆா்டி-ன் ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த ஒரு பகுதி பாடமாக சேர்க்கப்பட்டது பற்றி...

News image

புத்தகங்கள் - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:54 pm IST

என்சிஇஆா்டி-ன் ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அவசரநிலை குறித்த ஒரு பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) புதிய பாடத்திட்டத்தின்படி, ”சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்” (Understanding Society: India and Beyond) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று நிகழ்வு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

'ஜனநாயகத்துக்கு எதிரான சவால்' என்ற தலைப்பின் கீழ் புதிதாக இந்தப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 1975 முதல் 1977 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின்படி, குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அந்தப் பாடப் பிரிவில், “1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம், உள்நாட்டுக் கலவரம் காரணமாக அப்போதைய அரசால் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு தடை விதிக்கப்பட்டன, பத்திரிகைகள் முடக்கப்பட்டன. ஏராளமான அரசியல் தலைவர்களும் ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

A section on the Emergency has been included in the NCERT Class 9 textbook.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.