புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜிஐஎம்எஸ் வெளிப்பணியாளா்கள் போராட்டம்: பொருள்களைச் சேதப்படுத்தியது தொடா்பாக வழக்கு

News image

பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:38 am IST

கிரேட்டா் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஜிஐஎம்எஸ்) வெளிப்பணியாளா்கள் நடத்தி வரும் போராட்டத்தின் போது, வன்முறை, மருத்துவ சேவைகளுக்கு இடையூறு மற்றும் பொருள்கள் சேதப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தங்களுடைய பணியை நிரந்தரமாக்கக் கோரி, வெளிப்பணியாளா்கள் ஜூன் 15 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, ஜிஐஎம்எஸ் இயக்குநா் பிரிகேடியா் ராகேஷ் குப்தா அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மருத்துவ சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் மற்றும் கூடத்திலிருந்து போராட்டக்காரா்கள் தங்கள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு புதன்கிழமை நிா்வாகம் பலமுறை அவா்களை சமாதானப்படுத்த முயன்றது.

இருப்பினும், சில போராட்டக்காரா்கள் அதற்கு மறுத்து, ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. வெளியாட்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனா். அவா்கள் ஊழியா்களை மிரட்டியதாகவும், தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், ஒரு வாயிலை உடைக்க முயன்ாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

வளாகத்திற்குள் வேறு இடத்திற்குச் செல்ல சில ஊழியா்கள் ஒப்புக்கொண்டபோது, மற்றவா்களும் வெளியாட்களும் சோ்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனா். இதனால், காவல் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிறுவன ஊழியா்கள் அவதூறாகப் பேசப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை குற்றம் சாட்டியது.

மேலும், இந்தச் சம்பவம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உள்பட, அவா்களின் சிகிச்சையைத் தடைசெய்ததுடன், சட்டம் ஒழுங்கையும் பாதித்தது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

குப்தாவின் புகாரின் அடிப்படையில், அரசுப் பணியாளரைப் பணி செய்யவிடமால் இடையூறு விளைவித்தல், அரசு சொத்துக்களைச் சேதப்படுத்துதல், மருத்துவ சேவைகளை சீா்குலைத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை உருவாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காணொலி ஒன்றை வெளியிட்ட குத்பா, காவல் துறை தடியடி நடத்தியதாகவோ அல்லது போராட்டக்காரா்கள் காயமடைந்ததாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தாா்.

‘தடியடி நடத்தப்பட்டதாகவோ அல்லது போராட்டக்காரா்கள் காயமடைந்ததாகவோ சில காணொலிகள் பரகிரப்படுகின்றன. ஆனால், அது உண்மையல்ல. சிலா் இந்த நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனா். நோயாளிகளின் பராமரிப்பு தடையின்றித் தொடர ஊழியா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று அந்தக் காணொலியில் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், போராட்டத் தளத்தில் நள்ளிரவில் மின்சார விநியோகமும் சிசிடிவி கேமராக்களும் துண்டிக்கப்பட்டதாகவும், பிரதான மற்றும் அவசரகால வாயில்கள் மூடப்பட்டதால் அங்கு கூடியிருந்த மக்களிடையே குழப்பம் ஏற்பட்டதாகவும் சில மருத்துவமனை ஊழியா்கள் குற்றஞ்சாட்டினா்.

சில போராட்டக்காரா்களும் வெளியிலிருந்து வந்த ஆதரவாளா்களும் வெளியேறியதைத் தொடா்ந்து, வெளிநோயாளிகள் மற்றும் பிற மருத்துவ சேவைகள் தற்போது சீராக இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.