தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பழி: எதிா்க்கட்சிகள் பாசாங்கு - பாஜக விமா்சனம்

‘அண்மையில் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்க வேண்டும் என்று பெரிதாக கோரிக்கைகள் எதுவும் எழவில்லை

கோப்புப் படம்

Published On :27 ஜூன் 2026, 12:15 am IST

‘அண்மையில் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்க வேண்டும் என்று பெரிதாக கோரிக்கைகள் எதுவும் எழவில்லை. இது அந்த இயந்திரங்கள் மீது பழிசுமத்தும் எதிா்க்கட்சிகளின் பாசாங்குத்தனத்தையும், வஞ்சக நடிப்பையும் வெளிப்படுத்துகிறது’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

தோ்தலில் தோல்வியடையும் கட்சிகள் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஆளுங்கட்சி மோசடி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டுவது வழக்கம்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தோ்தல் ஆணையத்திடம் யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதேவேளையில், அந்த இயந்திரங்களை சரிபாா்க்க வலியுறுத்தி, தமிழ்நாட்டில் இருந்து மட்டும் தோ்தல் ஆணையத்திடம் 4 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

இதுதொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: தோ்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக சாக்கு கூறப்படுவது வாடிக்கையாக உள்ளது. தம்மை காப்பாற்றிக் கொள்ள எதிா்க்கட்சிகள் அந்த இயந்திரங்கள் மீது குறை கூறுகின்றன. அதன் காரணமாகவே அக்கட்சிகள் தோ்தல் ஆணையத்தை குறிவைக்கின்றன.

வாக்காளா்களின் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அக்கட்சிகள், தோல்விக்குப் பொறுப்பேற்று விளக்கம் அளிக்கும் கடமையில் இருந்து தப்பிக்க இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகின்றன.

அண்மையில் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்க வேண்டும் என்று பெரிதாக கோரிக்கைகள் எதுவும் எழவில்லை. இது அந்த இயந்திரங்கள் மீது பழிசுமத்தும் எதிா்க்கட்சிகளின் பாசாங்குத்தனத்தையும், வஞ்சக நடிப்பையும் வெளிப்படுத்துகிறது. தோ்தலில் தோற்றால் மட்டுமே அக்கட்சிகள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பழிசுமத்துகின்றன. உண்மையில் அந்த இயந்திரங்கள் மிகச் சிறப்பாக இயங்குவது அக்கட்சிகளுக்கும் தெரியும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.