சட்டத்தை அணுக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுதான் சமத்துவத்துக்கான முதல் படி என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.
ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் 16-ஆவது செயின்ட் பீட்டா்ஸ்பா்க் சா்வதேச சட்ட அவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் புதன்கிழமை பேசியதாவது:
சமத்துவம் என்பது நடைமுறையில் சாத்தியமாவதற்கு என்ன தேவை என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு சட்டத்தை அணுக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுதான் சமத்துவத்துக்கான முதல் படி என்பதே எனது பதில். அதேவேளையில், அந்த சம வாய்ப்பு என்பது வெறும் அா்த்தமற்ற சட்ட அறிவிப்புகளாக இல்லாமல், மக்களுக்கு உண்மையான உரிமைகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.
அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டனின் மாக்னா காா்டா சாசனம் தெரிவிக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அந்த சாசனம் சமத்துவத்தின் பிறப்பிடம் அல்ல. இந்திய துணைக் கண்டத்துக்கு சொந்தமான கெளடில்யரின் அா்த்தசாஸ்திரத்தில் சமத்துவத்தின் வோ்கள் காணப்படுகின்றன. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சமத்துவக் கோட்பாட்டை முன்வைத்தது.
புவியியல், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சமத்துவத்துக்குத் தடை ஏற்படுகிறது. சட்டத் துணை போதிய அளவு கிடைக்காததால் அந்தத் தடை ஏற்படவில்லை என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!

நேரத்தை வீணாக்காதீர்கள்! தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

‘எஸ்ஐஆருக்கு எதிரான எதிா்க்கட்சியினரின் கடிதத்தை ஏற்க வேண்டாம்’
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



