FOLLOW US

ON GOOGLE DISCOVER

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நேரத்தை வீணாக்காதீர்கள்! தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது பற்றி...

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:26 pm IST

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டதில் காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியவுடன், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.

அப்போது, எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படையும் பிரச்னைகளை மையமாகக் கொண்டே இந்தப் போராட்டம் நடைபெற்றதாக நீதிபதிகளிடம் அந்த வழக்கறிஞர் தெரிவித்து வாதத்தை முன்வைத்தார்.

அப்போது, அவரது பேச்சை நிறுத்திய நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர், “மிக்க நன்றி” என்று பதிலளித்தனர்.

தொடர்ந்து, ஆயுதமற்ற போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தாக்குவதாக விடியோ காணொலிகளை அந்த வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.

ஆனால், “காணொலிகளை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை பார்க்க எங்களுக்கு நேரமில்லை” எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.

முன்னதாக, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா அமர்வில், தில்லி காவல்துறை நடவடிக்கை தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள், “நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்" எனத் தெரிவித்து, விசாரணைக்கு ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Don't waste time - Supreme Court refuses to hear the Delhi Police lathi-charge case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.