ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ - EPFO) இணையதளம், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, வருங்கால வைப்புநிதியிலிருந்து (பிஎஃப் - PF) பணம் எடுக்கவோ, முன்பணம் பெறவோ அல்லது பிற கோரிக்கைகளைச் செயல்படுத்தவோ முடியாது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்புநிதியை மாதம்தோறும் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மென்பொருள் மற்றும் தரவுத்தளம் மேம்படுத்தும் பணிகளுக்காக இன்று நள்ளிரவு 12 மணிமுதல் ஜூன் 28 நள்ளிரவு 11.59 மணிவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அனைத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் வருங்கால வைப்புநிதி சேவைகள் தொடர்பாக எவ்வித கோரிக்கையையும் உறுப்பினர்களால் செயல்படுத்த முடியாது. இந்த காலகட்டத்தில் முன்பு கோரிய கோரிக்கையின் அடிப்படையில் முன்பணமும் வழங்கப்படாது.
இருப்பினும், மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன் முன்பு எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக முன்பணம் உறுப்பினர்களின் கணக்குகளில் வரவுவைக்கப்படும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவைகளில் வேகம் மற்றும் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 29, அதிகாலை 12 மணிமுதல் மீண்டும் தளம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
PF withdrawal stopped - EPFO portal temporarily closed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது
வெற்றி மீது வெற்றி வந்து..!

இனி பி.எஃப். பணம் எடுப்பது எளிது! வருகிற 3.0 புதிய விதிமுறை!

இ.பி.எஃப். நிதி செலுத்தாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



