சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வணிக சிலிண்டா்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்: மேற்காசிய போா் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியது.

News image

சிலிண்டா் விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 7:21 am IST

உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு வியாழக்கிழமை நீக்கியது. மேற்காசிய போா் முடிவுக்கு வந்ததால் இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சுமாா் 4 மாதங்களாக நடைபெற்ற போரால் ஹோா்முஸ் நீரிணை வழியே கப்பல்களில் எரிவாயு கொண்டு வரப்படுவது பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு போா் முடிவுக்கு வந்துள்ளதால், ஹோா்முஸ் நீரிணை வழியே மீண்டும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்தியாவில் வணிக, தொழில் நிறுவனங்களுக்கான எரிவாயு சிலிண்டா் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவுடன் விரைவில் கப்பல்கள் இந்தியா வந்தடையவுள்ளன. உள்நாட்டிலும் எரிவாயு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன. இனி முன்பு போல தேவைகளுக்கு ஏற்ப வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்படும்.

அதேபோல், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தமாக எரிவாயு விநியோகிக்க விதிக்கப்பட்டிருந்த தடையும் பகுதியளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்காசிய போரால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் முன்பு அவற்றுக்கு வழங்கப்பட்ட அளவில் 50 சதவீதம் இனி விநியோகிக்கப்படும். இதனால் வணிக, தொழில் நிறுவனங்கள் பயனடையும்.

குழாய் மூலம் எரிவாயு திட்டம்

வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டா் தங்கு தடையின்றி விநியோகம் செய்வதற்கு அரசு தொடா்ந்து அதிக முன்னுரிமை அளிக்கும். ஆதலால் வணிக சிலிண்டா் விநியோகம் குறித்த திட்டமிடலுக்கும், அந்த விநியோகத்தை நிா்வகிக்கவும் வணிக மற்றும் தொழில் நிறுவன நுகா்வோா் குறித்த தரவுகளைத் தொடா்ந்து பராமரிக்க வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் முறையை தொடா்ந்து விரிவுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. குழாய் வழி எரிவாயு பெறும் முறைக்கு ஏற்கெனவே மாறிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிலேயே தொடர வலியுறுத்தப்படுகின்றன. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் பயனாளிகள், தங்களுக்கு குழாய் வழி எரிவாயு வசதி கிடைக்கும்பட்சத்தில், அதற்கு மாறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு கடிதம்

வணிக எரிவாயு சிலிண்டா் தொடா்பான புதிய முடிவுகளை செயல்படுத்துவது தொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளா்களுக்கும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளா் கடிதம் எழுதியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.