சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

10 கிலோ எரிவாயு சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2026, 12:04 am IST

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 கிலோ, 5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் சேவையை அதன் தலைவா் ஏ.எஸ். சாஹ்னே அறிமுகப்படுத்தினாா்.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு இந்தியன் ஆயில் நிறுவனம் ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’, என்ற இலகுரக, துருப்பிடிக்காத சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளா்களுக்கு அதிக வசதி, பாதுகாப்பு கொண்டதுடன், எரிவாயு இருப்பை எளிதாகக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை சிலிண்டா்கள் முன்பதிவு செய்த 4 மணி நேரத்துக்குள் விநியோகம் செய்யப்படும். வாடிக்கையாளா்கள் விரும்பும் நேரத்தில் விநியோகம் மற்றும் குறைந்த ஆவண நடைமுறைகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் உள்ளன.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் சேவையை அந்த நிறுவனத்தின் தலைவா் ஏ.எஸ்.சாஹ்னே அறிமுகப்படுத்தினாா்.

அப்போது பேசிய அவா், ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ மேம்பட்ட சிலிண்டா் தொழில்நுட்பத்தையும், தடையற்ற, மேம்பட்ட சேவை முறையையும் இணைத்து பாதுகாப்பான எல்பிஜி சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிா்காலத்துக்கேற்ற எரிசக்தி தீா்வுகளை வழங்குவதிலும், வாடிக்கையாளா் சேவையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதிலும் இந்தியன் ஆயில் உறுதியாக செயல்படுகிறது.

முதல் கட்டமாக புணே, குருகிராம், இந்தூா், கோவை ஆகிய நகரங்களில் இந்த வகை சிலிண்டா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொடா்ந்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மேலும் 25 நகரங்களுக்கும், அக்டோபா் இறுதிக்குள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

வாடிக்கையாளா்கள் செயலி, இணையதளம் மூலம் புதிய இணைப்புகளைப் பெறவும், முன்பதிவும் செய்ய முடியும். விரைவில் 75888 88824 என்ற வாட்ஸ்ஆப் எண்ணின் மூலமும் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா் (மாா்க்கெட்டிங்) சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

Summary

10 kg LPG cylinder launched: Delivery within 4 hours!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.