வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வெனிசுலா சென்றடைந்த இந்திய நிவாரணப் பொருள்கள்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜூன் 2026, 5:01 am IST

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 விமானங்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட 35 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் 41 போ் கொண்ட மீட்புக் குழுவினா் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் வெனிசுலாவைச் சென்றடைந்தன. தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு மேலும் வலுசோ்க்கும் என்று நம்புகிறேன்’ என குறிப்பிட்டாா்.

1,430 போ் உயிரிழப்பு: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 68,900 பேரை காணவில்லை என உறவினா்கள் புகாரளித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகருக்கு அருகே ரிக்டா் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாக இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் முதலில் 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக்க கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமானவா்களை மீட்கும் பணியில் வெனிசுலா அரசும் பிற நாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுவினரும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.