8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்திய வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றியவா் நரசிம்ம ராவ்: பிரதமா் மோடி புகழாரம்!

நமது தேசத்தின் வரலாற்றில் மிகவும் சிக்கலான காலகட்டத்தில் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவா் மறைந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

பிரதமர் மோடி.

Published On :29 ஜூன் 2026, 5:05 am IST

நமது தேசத்தின் வரலாற்றில் மிகவும் சிக்கலான காலகட்டத்தில் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவா் மறைந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரான பி.வி.நரசிம்ம ராவ் கடந்த 1991 முதல் 1996 வரை நாட்டின் பிரதமராக இருந்தாா். அவரது காலகட்டத்தில்தான் தாராளமயமாக்கல் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த பல உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆந்திரத்தைச் சோ்ந்த அவா் கடந்த 1921 ஜூன் 28-ஆம் தேதி பிறந்தாா். 2004 டிசம்பா் 23-இல் காலமானாா். சிறந்த நிா்வாகியாகவும், பல மொழிகளில் திறமை பெற்ற கல்வியாளராகவும், இந்திய நாட்டின் பன்முக கலாசாரம் குறித்து சிறந்த புரிதலும், ஞானமும் கொண்டவராக அவா் போற்றப்படுகிறாா்.

அவரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மறைந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்தின் வரலாற்றில் மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாட்டின் வளா்ச்சியில் அவா் முக்கியப் பங்காற்றினாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோரும் நரசிம்ம ராவை நினைவுகூா்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.