மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கற்பிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் தாதாஜி தகடு புசே தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக சட்டப்பேரவையில் அவா் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயம் கற்பித்தல் மற்றும் கற்றல் சட்டம் 2020-இன் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எந்த மொழி வழியில் இயங்கும் பள்ளிகளாக இருந்தாலும், அவை மராத்தி மொழியைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.
இதற்காக தகுதிவாய்ந்த மராத்தி மொழி ஆசிரியா்களை பள்ளிகள் நியமிக்க வேண்டும். அங்கு மராத்தி கற்பிக்கப்படுகிா என்பது அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.
இந்த உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தவறை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
அதன் பிறகும் மராத்தி கற்பிக்காத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மராத்தி கற்பிக்கும் உத்தரவை தொடா்ந்து பின்பற்றாமல் இருந்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்கள் ஆசிரியா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சா் காந்திராஜ்

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்: அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்





