தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள்

இளம் தொழிலதிபர் கொலை விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Katan - Siya

கேத்தன் - சியா - ENS

Published On :

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் தொழிலதிபர் கொலையில் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட கேத்தனும் அவருடைய வருங்கால மனைவியும் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே, கொலையாளி சேத்தன் வந்து, அவர்களுக்காக காத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புணேவைச் சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால், அவரது வருங்கால மனைவி மற்றும் ஆண் நண்பரால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கொலையாளிகள் இருவருமே பயங்கர கிரிமினலாக பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேத்தன், தன்னுடைய செல்போன் மூலம் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய செல்போனை தன்னுடைய கடையிலேயே வைத்துவிட்டு, தன்னுடய கடை ஊழியரின் செல்போனை எடுத்து வந்துள்ளார்.

அந்த ஊழியரின் செல்போனும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.

முன்கூட்டியே வந்த கொலையாளி

சம்பவம் நடைபெற்ற ஜூன் 18 அன்று கேத்தன் - சியா ஜோடி 9.30 மணிக்கு லோஹாகத் கோட்டைக்கு வந்துள்ளனர். அதற்கு முன்பே, சேத்தன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து அவர்களுக்காகக் காத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையிடம் தேரிவு

கொலையாளிகள் இருவரும் முன்கூட்டியே ஒரு நாள் அங்கு வந்து கொலை செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தைத் தெரிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மறைக்க அணிந்த ஹுடியே மாட்டிவிட்டது

முகம் தெரியாமல் மறைப்பதற்காக சேத்தன் அணிந்திருந்த ஹுடிதான் அவரைக் காட்டிக் கொடுத்தது. கடும் வெய்யிலில் ஒருவர் ஹுடி அணிந்து வந்தது காவல்துறைக்கு சந்தேகத்தை கொடுத்ததே விசாரணையின் ஆரம்பப்புள்ளி.

மிக விரைவாக திரும்பியதும்

கோட்டைக்கு ஏறிச் செல்பவர்கள் அதிக நேரம் அங்கு இருப்பார்கள். ஆனால், சேத்தன் 10 நிமிடத்தில் திரும்பியிருக்கிறார். சிசிடிவு பதிவு மூலம் இது உறுதியானது.

கொலை நடந்த நேரம்

சரியாக காலை 10.30 மணிக்கு கேத்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Summary

Young Entrepreneur Murder! Investigation Reaches a Crucial Stage! Several Shocking Details Revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.