FOLLOW US

ON GOOGLE DISCOVER

மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

கனடாவில் இந்தியப் பெண் கொலை வழக்கு: 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞர் கைது

கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image

கைது செய்யப்பட்டவர். - IANS

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:47 pm IST

கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் டொரண்டோவில் உள்ள வீட்டில் இருந்து 30 வயதான ஹிமான்ஷி குரானா என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய போலீஸார், இதுதொடர்பாக அவருடன் நெருங்கிய உறவில் இருந்த அப்துல் கஃபூரி(32) என்பரைத் தேடி வந்தனர்.

மேலும் கடந்த ஆண்டே அப்துலை கைது செய்ய கனடா சட்ட அமலாக்கத் துறை நாடு தழுவிய பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் அவர் கனடாவுக்குத் திரும்பியபோது டொரண்டோ விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

கைதான இளைஞர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமறைவாக இருந்த அப்துல் கனடா அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எந்த நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டார் என்ற விவரத்தை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.

Summary

A 32-year-old man has been arrested and charged with first-degree murder in connection with the death of an Indian national last December, local media reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.