திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஈரான் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை பேசினாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 3:30 am IST

ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை பேசினாா்.

அப்போது ஹோா்முஸ் நீரிணையை இந்தியா மற்றும் பிற உலக நாடுகள் சுதந்திரமாக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மசூத் பெசஷ்கியானிடம் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மேற்காசிய கள நிலவரம் குறித்து ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன். பேச்சுவாா்த்தைகள் மூலம் தீா்வை எட்டுவதற்கான முன்னெடுப்புகளை வரவேற்பதாக அவரிடம் தெரிவித்தேன். இதுபோன்ற தொடா் முயற்சிகளால் அந்தப் பிராந்தியத்தில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன்.

ஹோா்முஸ் நீரிணை சுதந்திரமாக செயல்படுவதன் அவசியத்தை அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன்’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.