ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் இன்று (மார்ச் 1) பேசினார்.
கர்நாடகத்தின் பல்லாரி தொகுதி எம்.எல்.ஏ. உள்பட அப்பகுதியைச் சேர்ந்த 32 பேர் துபையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பில் உரையாடினார்.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. இதனால், துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவின் கெம்பகெளடா விமான நிலையத்தில் இருந்து மட்டும் 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளதாவது:
''ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் கர்நாடக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
புது தில்லியில் உள்ள குடியுரிமை ஆணையருடன் நான் ஆலோசனை நடத்தி, நமது மக்களைப் பாதுகாக்கத் தேவையான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Karnataka CM Siddaramaiah spoke to people stranded in Dubai through a video call
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எவ்வளவு நேரம் பேசினார்?
வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




