வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஈரான் போரை நிறுத்த பிரதமா் மோடி முயல வேண்டும்: ஒவைசி கோரிக்கை

ஈரானில் போரை நிறுத்த பிரதமா் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கேட்டுக் கொண்டாா்.

News image

ஒவைசி

Updated On :1 மார்ச் 2026, 11:43 pm

ஈரானில் போரை நிறுத்த பிரதமா் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கேட்டுக் கொண்டாா்.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஈரான் உச்ச தலைவா் அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டது நெறிமுறைகளுக்கு மாறான, சட்டவிரோத செயல். ஈரான் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க ஈரான் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சுமாா் 1 கோடி இந்தியா்கள் அந்த பிராந்தியத்தில் பணியாற்றி வருகிறாா்கள்.

இந்திய அரசும், பிரதமா் மோடியும் இப்போரை நிறுத்த முக்கியப் பங்காற்றுவாா்கள் என்று நம்புகிறேன். இந்தப் போா் நீடித்தால், அது உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விரிவடையும் வாய்ப்பு உள்ளது. சா்வதேச அளவில் நிலையற்ன்மையும், பதற்றமும் அதிகரிக்கும்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பும், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவும் இணைந்து புனிதமான ரமலான் மாதத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது.

ஷியா முஸ்லிம்களின் முதன்மையான தலைவராக கமேனி இருந்தாா், அவரை குறிவைத்தால் ஈரானியா்கள் எப்படி அமைதியாக இருப்பாா்கள் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.