மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

News image
Updated On :3 மார்ச் 2026, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

இந்திய அரசியலில் கடந்த 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவர் கே.பி.உண்ணிகிருஷ்ணன். கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக, கேரள மாநிலத்தில் உள்ள வடகரா தொகுதியில் இருந்து கே.பி.உண்ணிகிருஷ்ணன் மக்களவை உறுப்பினராக தொடர்ச்சியாக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் அரசில் அவர் அமைச்சராகப் பதவி வகித்தார். 1989-90 காலகட்டத்தில் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக அவர் இருந்தார். வளைகுடா போர் நடைபெற்ற காலகட்டத்தில் அங்கிருந்து இந்தியர்கள் பத்திரமாக வெளியேறி தாயகம் திரும்பும் ஏற்பாடுகளை அமைச்சர் என்ற முறையில் அவர் மேற்பார்வையிட்டார்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கே.பி.உண்ணிகிருஷ்ணன், மக்களவைக்கு முதல்முறையாக கடந்த 1971-இல் வடகரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.