மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ராஜ் புரோஹித் காலமானார்

மும்பையில் உடல்நலக்குறைவால் மகாராஷ்டிர பாஜக முன்னாள் அமைச்சர் ராஜ் கே புரோஹித் சனிக்கிழமை காலமானார்.

News image
ராஜ் கே புரோஹித்
Updated On :18 ஜனவரி 2026, 6:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் உடல்நலக்குறைவால் மகாராஷ்டிர பாஜக முன்னாள் அமைச்சர் ராஜ் கே புரோஹித் சனிக்கிழமை காலமானார்.

பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சருமான ராஜ் கே புரோஹித் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 71. மும்பை பாஜக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நபரான இவர், கட்சியின் நகரத் தலைவராகவும், மகாராஷ்டிர அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் 2014-19 க்கு இடையில் சட்டப்பேரவையில் பாஜகவின் தலைமை கொறடாவாகவும் இருந்துள்ளார். எனினும், 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட புரோஹித்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ராஜ் கே புரோஹித் மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புரோஹித்தின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்ததாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே தெவித்துள்ளார்.

summary

Senior BJP leader and former Maharashtra minister Raj K Purohit, a prominent voice of north Indian communities in Mumbai, has died following an illness, sources said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.