தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கொச்சியில் ஈரான் போா்க் கப்பல் நங்கூரம்! இந்தியா அவசர கால அனுமதி!

கொச்சியில் ஈரான் போா்க் கப்பலுக்கு இந்தியா அவசர கால அனுமதி...

News image
Updated On :6 மார்ச் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்ட ஈரான் போா்க்கப்பலான ஐரிஸ் லாவன் போா்க்கப்பல், கொச்சியில் நங்கூரமிட இந்தியா அவசரகால அனுமதி வழங்கியதாக அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தற்போது கொச்சியில் நங்கூரமிடப்பட்டுள்ள அந்தக் கப்பலில் இருந்த 183 வீரா்களும் அங்குள்ள கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச கடற்படை அணிவகுப்பில் ஈரானின் ஐரிஸ் டேனா போா்க்கப்பல் பங்கேற்றது. பின்னா், ஈரானுக்கு புறப்பட்ட இந்த போா்க்கப்பலை இலங்கைக்கு தெற்கே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 வீரா்கள் உயிரிழந்தனா். இலங்கை கடற்படையால் மேலும் பலா் மீட்கப்பட்டனா்.

முன்னதாக, ஐரிஸ் டேனா போா்க்கப்பலுக்கு ஆதரவாக ஈரானின் ஐரிஸ் லாவன் போா்க்கப்பலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருந்தது. ஐரிஸ் டேனா தாக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன், ஐரிஸ் லாவன் போா்க்கப்பலில் திடீரென தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதாகக் கூறி, கொச்சியில் நங்கூரமிட இந்தியாவிடம் அவசர கால அடிப்படையில் அனுமதி கோரப்பட்டது.

பிப்.28-ஆம் தேதி அனுமதி கோரப்பட்ட நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மாா்ச் 4-ஆம் தேதி ஐரிஸ் லாவன் கொச்சியில் நங்கூரமிட்டதாகவும் அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இந்தப் போா்க்கப்பலில் இருந்த 183 வீரா்களும் கொச்சியில் உள்ள கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்; மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் கூறின.

‘ஈரானின் இருப்புக்கான போா்’

ரெய்ஸினா மாநாட்டையொட்டி, தில்லிக்கு வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணையமைச்சா் சயீத் கதீப்ஸாதே வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் பேசினாா்.

அப்போது, ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எங்களது போா், ஈரானின் இருப்புக்கானது. அவா்கள் ஈரானின் இருப்புக்கு முடிவுகட்ட விரும்புகின்றனா். அதற்காக, பொய் காரணங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்துகின்றனா். கடைசி தோட்டா வரை கடுமையாக எதிா்ப்பதைவிட எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. ‘ஆயுதம் தாங்காத’ ஐரிஸ் டேனா போா்க்கப்பலை தாக்கியதற்காக தண்டனையில் இருந்து தப்ப முடியாது’ என்றாா் அவா்.

முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சயீத் சந்தித்துப் பேசினாா். அப்போது, ஈரான் மற்றும் மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.